
சபா, பகாங், மலாக்கா ஆகிய மாநிலங்களில் வெள்ளம் நிலை சீரடைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அந்த மூன்று மாநிலங்களிலும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. எனினும், ஜொகூர் மாநிலத்தின் சிகாமாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நெகிரி செம்பிலானில் எந்த மாற்றமும் இல்லை. பகாங் மாநிலத்தின் தெமர்லோ, பெக்கான், பெரா, மாரான் மற்றும் ரொம்பினில் உள்ள 22 துயர்துடைப்பு மையங்களில் 782 பேர் தங்கியுள்ளனர். நேற்று 27 மையங்களில் 933 பேர் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
