25.7 C
Kuala Lumpur
Saturday, September 26, 2026

Vetri

மொகலாயப் பேரரசர் ஔரங்க சீப், நல்லவரா? கெட்டவரா??

🔥 Views : 32
👁 Reading Now : 65

அக்பர் பாதுஷாவைப் போல இந்திய மொகலாய சாம்ராஜியத்தை 49 ஆண்டுகள் 1658 முதல் 1707 வரை ஆண்ட இன்னொரு பேரரசர் ஔரங்க சீப்; இன்றைய ஆஃப்கானிஸ்தான் தலைநகரம் காபூலில் இருந்து தமிழ் நாடுவரை பரந்து விரிந்திருந்தது இவரின் சாம்ராஜ்யம்.

சிவாஜி வழிவந்த மராட்டிய மன்னர்களுடனும் இராஜபுத்திர சிற்றரசர்களுடனும் அனைத்து சுல்தான்கள்  மற்றும் பேரரசர்களும் இணக்கமாக இருந்த நிலையில் ஔரங்க சீப் மட்டும் அனைத்துத் தரப்பினரையும் அழித்து நசுக்கி துவம்சம் செய்தார். எதிரிகளை மட்டுமல்ல; உடன் பிறந்த சகோதரர்களையே ஈவு இரக்கமின்றி வேட்டையாடி பதவியைக் கைப்பற்றிய இவர்மீது, வரலாற்று ஆய்வாளர்கள் இன்னமும் கடுமையான விமர்சனத்தை வைப்பதுண்டு.
தன்னை எதிர்க்க நினைத்த ஒரு தம்பியின் கண்களில் பழுக்க வைத்த வாளைச் செருகிய இவர், தாஜ்மகாலை எழுப்பிய தன் தந்தை ஷாஜகானை சாகும்வரை அரண்மனைக் கைதியாக வைத்திருந்தார்.
இத்தனை மூர்க்கத்தனம் கொண்ட ஔரங்க சீப், சொந்த வாழ்க்கையிலும் சமய நெறியிலும் எளிமையிலும் எளிமையாக வாழ்ந்தார்.
அரசாங்க கருவூலத்தில் இருந்து சொந்த செலவுக்காக ஒரு காசுகூட எடுத்ததில்லை. எத்தகைய நெருக்கடியான கட்டமாக இருந்தாலும் ஐந்து வேளை தொழுகை நடத்த தவறியதே இல்லை. சொந்தமாக குல்லா தயாரித்தும் குர்ரான் மறை நூலை பிரதி எடுத்தும் அவற்றை விற்ற பணத்தில்தான் வாழ்ந்தார்.
இறந்தபின் தன் உடலில் போர்த்த வேண்டிய ‘கஃபன்’ துணிக்கும் நல்லடக்க செலவுக்கும் முன் கூட்டியே பணத்தை ஒதுக்கி வைத்ததுடன், இறந்தபின் நல்லடக்க நிகழ்வும் எளிமையாக நடைபெற வேண்டும் என்று உயில் எழுதி வைத்தவர் ஔரங்கசீப். அவரின் நினைவு நாள் இன்று.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles