
காஞ்சிபுரத்தில் உள்ள பாராம்பரியப் புகழ்மிக்க காமாட்சி அம்மன் ஆலயத்தின் சார்பில் ஆண்டுதோறும் பிரம்ம உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் நடைபெற்ற பிரம்ம உற்சவம் தொடர்பில் காமாட்சி அம்மன் வீதி உலா இடம்பெற்றது. ஊர்வலம் செங்கழு நீரோடைப் பகுதியில் வந்தபோது, அங்குள்ள பழைமை வாய்ந்த ஹஸ்ரத் சையத்ஷா ஹமீது அவுலியா பள்ளி வாசல் சார்பில் அதன் தலைவர் ஷஃபியுல்லா தலைமையில் இஸ்லாமியர்கள் பூத்தட்டுகளுடன் வரவேற்றனர். காமாட்சி அம்மன் வீற்றிருந்த பல்லக்கு நிறுத்தப்பட்டு, இஸ்லாமியர்களின் பூத்தட்டுக்களை ஏற்றுக்கொண்ட சிவாச்சாரியார்கள் அங்கு அவர்களுக்காக தீபாராதனையும் நடத்தினர். சமய நல்லிணக்கம் இன்றளவும் போற்றப்படுவதற்கு இது தக்க சான்றாகும்.



