
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி இவ்வாண்டு கத்தாரில் நடைபெறும் என உலகக் கால் பந்து அமைப்பான ஃபிஃபா, 2010 டிசம்பரில் அறிவித்திருந்தது.
நவம்பர் 21 முதல் டிச.18 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்காக கத்தார் தலைநகர் டோஹாவில் 8 மைதானங்கள் தயாராகி வருகின்றன. லீக் சுற்றில் தினமும் 4 ஆட்டங்கள் என 12 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் யுக்ரேன்மீது படையெடுத்து இலட்சக் கணக்கான மக்களின் வாழ்வில் அல்லலை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா பங்கேற்பதற்கு ஃபிஃபா தடைவிதித்துள்ளது.
கடந்த உலகக் கிண்ண கால் பந்துப் போட்டி ரஷ்யாவில்தான் 2018-இல் நடைபெற்றது. அதில் ஃபிரான்ஸ் கிண்ணத்தை வென்றது.



