
இந்த உலகில் அன்பும் கருணையும் இணைந்த மனிதநேயம்தான் உயர்வானது; இமயமலையை ஒட்டிய அரியானா மாநிலத்தில் இருந்து மருத்துவம் பயில யுக்ரேனுக்குச் சென்ற நேஹா, விடுதியில் இடம் கிடைக்காமல் ஒரு வீட்டில் வாடகை அறையில் தங்கி மூன்றாமாண்டு படித்து வந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவி, குழந்தைகளை பதுங்குகுழியில் தங்க வைத்துவிட்டு யுக்ரேன் இராணுவத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் தனித்து வாழும் தன்னுடைய தாய் அழைத்தும், அந்தக் குழந்தைகளைவிட்டு தாயகம் செல்ல மறுத்துவிட்டார் நேஹா. நேஹா சிறுமியாக இருந்தபோதே தந்தை இறந்ததால், தந்தையின் அரவணைப்புக்கு ஏங்கிய பெண் நேஹா. எல்லா ஏற்பாட்டுடன் கர்நாடகாவிற்குத் திரும்ப பதுங்குகுழியில் காத்திருந்த வேளையில், பசியால் துடித்த நவீன் சேகரப்பா என்ற மாணவர், 50 மீட்டர் தூரத்தில் உள்ள உணவுக்கடைக்குச் சென்று, அங்கு பணம் பற்றாமல் நண்பரை அழைத்து பணம் கேட்டுள்ளார். அந்தப் பணம் போய் சேர்வதற்குள் எவுகணைத் தாக்குதலுக்கு ஆளான நவீன் இறந்தது பெரும் சோகம்.



