
1MDB ஊழல் விவகாரம் தொடர்பில் பேங்க் நெகாராவின் முன்னாள் ஆளுநர் Zeti Akthar Azizஇன் கணவர் Taufiq Aymanனிடம் MACC விசாரணை நடத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள 1 MDB நிதியை திருப்பப் பெறுவதற்கான பொறுப்பு மட்டுமே ஊழல் தடுப்பு நிறுவனமான MACC க்கு ஒப்படைக்கப்பட்டடதாக அதன் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki தெரிவித்தார். எனினும் Taufiq, போலீஸ் விசாரணைக்கு உட்பட்டிருப்பதாகவும் அவர் மீதான விசாரணை அறிக்கை தயாரானவுடன் அதை சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் போலீஸ் சமர்ப்பிக்கும் எனவும் Azam Baki விவரித்தார்.



