32.9 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

சிவபாலன் தேடப்படும் குற்றவாளியா? குடும்பத்தார் அதிர்ச்சி!

🔥 Views : 7
👁 Reading Now : 35

போலீஸ் காவலில் மரணமடைந்த எங்கள் சகோதரர் சிவபாலன் தேடப்படும் ஒரு குற்றவாளி என கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று குடும்பத்தார் தெரிவித்தனர். சிவபாலன் மீது குற்றச்செயல் புகார்கள் இருப்பதாக போலீசார் இப்போது கூறுகிறார்கள்.
இவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என்றால் பாதுகாவலர் நிறுவனத்தில் எப்படி வேலை செய்ய முடியும் என்று அவரின் சகோதரர் யுவராஜ் மற்றும் சகோதரி தனலட்சுமி கேள்வி எழுப்பினர்.
இவர் மீது புகார்கள் இருந்தால் அவரை ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை.
மரணம் அடைந்த பின்னர் அவர் தேடப்படும் குற்றவாளி என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
காலை 11:45 கைது செய்யப்பட்ட இவர் 12.30 மணிக்கு இறந்தார்.
ஆனால். பிற்பகல் 2.30 மணிக்கு எங்களை தொடர்பு கொண்ட போலீசார் அவர் உயிருடன் இருப்பதாக கூறினர்.
போலீசார் கூறுவதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன.ஆகவே இவரின் மரணம் தொடர்பில் மறைந்திருக்கும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வர வேண்டுமென சிவாபலன் குடும்பத்தினர் கோரிக்கையை முன்வைத்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles