25 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

ஆசியக் கிண்ணம் பயிற்சி ஆட்டத்தில் மலேசியா தோல்வி!

🔥 Views : 53
👁 Reading Now : 49

2022 உலகக் கிண்ணம் மற்றும் 2023 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்கு தயாராகும் வண்ணம் நடைபெற்ற பயிற்சி ஆட்டமொன்றில் மலேசிய அணியை 4-1 எனும் கோலில் குவைத் அணி வீழ்த்தியது.
நேற்று இவ்வாட்டம் டுபாய் தி செவன்ஸ் அரங்கில் நடைபெற்றது.ஆட்டத்தின் 21 ஆவது நிமிடத்தில் அகமட் அடிபீரி குவைத் அணிக்கான முதல் கோலை அடித்தார்.முதல் பாதி ஆட்டத்தின் 28 ஆவது நிமிடத்தில் கீல்தாமி டி பாவ்லா மலேசிய அணிக்கான ஒரு கோலை போட்டு ஆட்டத்தை 1-1 என சமப்படுத்தினார.
.ஆட்டத்தின் 55 -ஆவது நிமிடத்தில் பஹாட் அல்ஜெரியும்,61 ஆவது நிமிடத்தில் சபாய்ப் அல்கால்டியும்,குவைத் அணியின் கேப்டன் பஹாட் அல் – அல்பிராயீம் ஆட்டத்தின் 68 -ஆவது நிமிடத்தில் ஒரு கோலை போட்டு,குவைத் அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு,பயிற்றுனர் டான் செங் ஹோ ஒன்பது விளையாட்டாளர்களை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.எதிர்வரும் மே 28 -ஆம் தேதி மனாமா அரங்கில் மலேசிய அணி பஹ்ரேன் அணியை சந்திக்கவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles