
யுக்ரேனில் கடந்த 12 நாட்களாக கடுமையாக போர் நடந்துவரும் நிலையில், அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருக்கிறார்கள். இந்நிலையில், உக்ரைனில் கடந்த 24-ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமை சார்பில் உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார்.
