33.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

வளர்ப்பு மகள்மீது பாலியல் வன்கொடுமை: -1,050 ஆண்டு சிறைத் தண்டனை 42 ஆண்டுகளாக குறைப்பு

2018ஆம் ஆண்டு முதல் வயது குறைந்த வளர்ப்பு மகளை 50 முறை பாலியல் வன்கொடுமை செய்த 33 வயது ஆடவருக்கு விதிக்கப்பட்ட 1,050 ஆண்டு சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் 42 ஆண்டுளாக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு செஷன்ஸ் நீதிமன்றம் அந்த ஆடவருக்கு வழங்கிய நீண்ட கால தண்டனை ஏற்புடையது அல்ல என்பதோடு உணர்ச்சியின் அடிப்படையின் வழங்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதி Azmi Abdullah தீர்ப்பளித்தார். எனினும் அந்த ஆடவருக்கான 24 பிரம்படிகளையும் Azmi Abdullah நிலைநிறுத்தினார். 2018-இல் 12 வயதாக இருந்த தன் வளர்ப்பு மகளை 2020 ஆம் ஆண்டுவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அந்த ஆடவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி 27-இல் நீதிபதி எம்.குணசுந்தரி 1,050 ஆண்டுகள் சிறைவாசமும் 24 பிரம்படியும் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles