
யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடங்கி இன்றுடன் 14 நாட்கள் ஆகின்றன. போரை நிறுத்தும்படி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு யுக்ரேனும் பதிலடி கொடுத்து வருகிறது.
இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலினால் இதுவரை 61 மருத்துவமனைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன என யுக்ரேனிய சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.
