25.5 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

நாட்டின் பன்னாட்டு எல்லைகள் ஏப்ரல் முதல் திறக்கப்படும்:

🔥 Views : 34
👁 Reading Now : 44

2020 மார்ச் 16 முதல் மூடப்பட்டிருக்கும் நாட்டின் எல்லைகள், அடுத்த மாதத்தில் திறக்கப்படுகின்றன.

ஏப்ரல் 1-இல் பன்னாட்டு எல்லைகள் திறக்கப்படும்போது வெளிநாட்டவர்கள் உட்பட நாட்டிற்கு திரும்பும் மலேசியர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருக்கும் பட்சத்தில் இனி தனிமைப்படுத்திக் கொள்ளும் நடைமுறை இருக்காது என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

எனினும், வெளிநாட்டிற்கு செல்வதற்கு இரு தினங்களுக்கு முன்பாக RT-PCR சோதனையை மேற்கொள்வதோடு, நாட்டிற்குள் வரும் பயணிகள் RTK சுய கோவிட் பரிசோதனையை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்-பட்டுள்ளது.

மலேசியர்கள், மைசெஜாத்ரா தடுப்பூசிச் சான்றிதழை ஆதாரமாகக் கொண்டு பன்னாட்டு எல்லைகளைத் திறந்திருக்கும் பிற நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்றும் எல்லையைத் திறக்காத நாடுகளுக்கு VTL திட்டத்தின்கீழ் பயணம் செய்யலாமெனவும் பிரதமர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles