34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

மக்காவ் மோசடி கும்பலிடம் 57,200 ரிங்கிட் இழந்த ஆடவர்

வேலையிலிருந்து ஓய்வு பெற்ற ஆடவர் ஒருவர் தமது சேமிப்புடன் மனைவியின் சேமிப்பு தொகை என மொத்தம் 57,200 ரிங்கிட்டை மக்காவ் இணைய மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் மக்காவ் மோசடிக் கும்பலால் தாம் ஏமாற்றப்பட்டு குறித்து புகார் செய்துள்ளதை Hilir Perak மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Ahmad Adnan Basri உறுதிப்படுத்தினார். டெலிக்கோம் மலேசியாவிடமிருந்து அழைப்பதாக கூறிக்கொண்ட நபர் ஒருவர் அந்த ஆடவர் தொலைபேசி கட்டண பாக்கியை வைத்திருப்பதாக கூறியுள்ளார். அதனை அவேர் மறுக்கவே அந்த நபர் புக்கிட் அமான் போலீஸ் அதிகாரியிடம் பேசுங்கள் என்று கூறிவிட்டு மற்றொரு நபரிடம் தொலைபேசியை கொடுத்துள்ளார்.அதன் பிறகு தம்மை டத்தோ ரிடுவான் என்று கூறிக்கொண்ட அந்த நபர் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் அந்த ஆடவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பேங்க் நெகாராவிடம் பரிசோதிக்க வேண்டியிருப்பதாக தெரிவித்து அவரது வங்கி கணக்கு எண் மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்கு விவரங்களையும் பெற்றுள்ளார். அதன் பிறகுதான் தமது வங்கிக் கணக்கில் இருந்த 22,000 ரிங்கிட்டுடன் தமது மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்த மேலும் 35.000 ரிங்கிட்டையும் அந்த மோசடி கும்பல் மீட்டுள்ளதை அறிந்து அந்த ஆடவர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக Ahmad Adnan Basri தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles