25.5 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

சினமடைந்துள்ள ஜோகூர் வாக்காளர்கள்
தேசிய முன்னணியைத் தீர்த்துக்கட்டுவார்கள்

🔥 Views : 32
👁 Reading Now : 58

பதவி இல்லையென்றால் தூக்கம் வராத தேசிய முன்னணித் தலைவர்களின் பதவி வெறியால், நாட்டில் இப்பொழுது அதுவும் கொரோனா பாதிப்பு காலத்தில் தேவையில்லாத நான்காவது சட்டமன்றத் தேர்தலை மக்கள்மீது திணித்துள்ள தேசிய முன்னணிமீது கோபம் கொண்டுள்ள ஜோகூர் வாக்காளர்கள், வரும் சனிக்கிழமை தேர்தல்மூலம் தேசிய முன்னணியைத் தீர்த்துக் கட்டுவார்கள் என்று பிகேஆர் மகளிர் தலைவி Napsiah Khamis கிளர்ந்து எழுந்துள்ளார்.

அம்னோவுடன் பதவியை பங்குபோட்டுக் கொண்டிருந்த பெர்சத்து, பாஸ் கட்சிகள் தடுத்தும் தன்னிச்சையாக சட்டமன்றத்தைக் களைத்தது அம்னோ.

நம்பிக்கைக் கூட்டணி அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று மக்கள் கொண்டுள்ள ஆதங்கம் உண்மைதான் என்றாலும் நம்பிக்கைக் கூட்டணிக்கு உரிய வாய்ப்பு முழுதாக வழங்கப்படவில்லை என்பதையும் துரோகக் கூட்டத்தின் வஞ்சகத்திற்கு ஆளானதையும் புரிந்துள்ள ஜோகூர் வாக்காளர்கள் இன்னும் இரு தினங்களில் தேசிய முன்னணிக்கு, குறிப்பாக அம்னோவிற்கு தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள் என்று கெம்பாஸ் தொகுதி வேட்பாளருமான நப்சியா தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles