
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளன், கடந்த மே மாத இறுதியில் ஒரு மாத பரோலில் வெளியே வந்திருந்ததார். இதன்பின்னர் ஒவ்வொரு மாதமும் அவருக்கு பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. அப்படி மே 28-க்குப் பின் 10-வது முறையாக கடந்த மாதமும் பரோல் நீட்டிப்பு இருந்தது.ராஜீவ் கொலை வழக்கில் 1991 ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சுமார் 26 ஆண்டுகள் கழித்து கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஒரு மாத பரோல் விடுப்பில் ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றிருந்தார் அவர். இதற்கு பிறகு அவருக்கு பத்துக்கும் மேற்பட்ட முறை அவருக்கு பரோல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பேரறிவாளனுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு பிணை வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
