
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பென்னட்(57), இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் மனித இதய மாற்று அறுவை சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவரின் உடல்நிலை இல்லை என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த முடிவானது. இதற்கு டேவிட் பென்னட்டும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் ஜனவரி 7-இல் அறுவை சிகிச்சை நடந்தது. சுமார் 8 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் பன்றியின் இதயத்தை அவருக்கு வெற்றிகரமாக பொருத்தினர். தொடர்ந்து அவரின் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், இப்பொழுது அவர் காலமான செய்தி மருத்துவ உலகை கலங்கச் செய்துள்ளது.



