25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

PPR கார் நிறுத்தும் பகுதியில் 52 வாகனங்களுக்கு தீயூட்டிய சம்பவம்: -ஆடவன் கைது

🔥 Views : 6
👁 Reading Now : 64

கோலாலம்பூர், Jinjang வட்டாரத்தில் Intan Baiduri PPR குடியிருப்புப் பகுதியின் வாகன நிறுத்தும் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 52 வாகனங்களுக்கு தீ மூட்டியதன் தொடர்பில் 31 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டான். அந்த ஆடவன் முதலில் தன் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததாகவும் அதனால், அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இதர வாகனங்களும் தீப்பிடித்தாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் ACP Beh Eng Lai தெரிவித்தார். மதுபோதையில் தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தை அந்த ஆடவன் ஒப்புக்கொண்டதாகவும் இதன்தொடர்பில் சாட்சியம் அளிக்க இருவரை போலீஸ் அழைத்திருப்பதாகவும் Beh Eng Lai மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles