32.9 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

சிலாங்கூர் அரசின் இலவச கோவிட் 19 பரிசோதனை
மக்களிடையே அமோக ஆதரவு!

🔥 Views : 7
👁 Reading Now : 61
File Picture

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இலவச நோய்த்தொற்று மருத்துவப் பரிசோதனைக்கு மக்களிடையே அமோக ஆதரவு கிடைத்து இருப்பதாக மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
கடந்த மே 8ஆம் ஆம் தேதி முதல் மாநில முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் இலவச கோவிட்-19 பரிசோதனையில் இதுவரை 30, 000 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த பரிசோதனையில் 1,494 பேரிடம் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த இலவச பரிசோதனை பரிசோதனையில் பங்கு கொள்ள விரும்புவோர் https://screening.selangkah.mylogin என்ற அகப்பக்கம் வாயிலாகவும் அல்லது செலங்கா செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles