
கிளானா ஜெயா நோக்கி வந்த இரண்டு LRT ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் பயணிகள் காயம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
Prasarana Malaysia BHD இந்த விபத்து தொடர்பில் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த ரயில் விபத்து தொடர்பில் பல வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சில பயணிகள் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இரண்டு LRT ரயில்கள் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா உதவிகளும் வழங்கப்படும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
