25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அம்பாங்கில் நிலச் சரிவு;15 வீடுகள் பாதிப்பு; மூவர் புதையுண்ட இடத்தில் தேடும் நடவடிக்கை கள் முடுக்கி விடப் பட்டுள்ளன!

🔥 Views : 7
👁 Reading Now : 20

அம்பாங்கில் பண்டான் இண்டா தாமான் பெர்மாய் அடுக்கு மாடி வீட்டின் குடியிருப்பு ப் பகுதியில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 8 வாகனங்கள் மீது பாறைகள் உருண்டு வந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 4.30 மணி அளவில் இச் சம்பவம் நிகழ்ந்ததாக அவசர அழைப்பைப் பெற்ற அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் பாரோக் இஷாக் தெரிவித்தார். மேட்டுப் பகுதியில் இருந்து உருண்டு வந்து விழுந்த பாறையினால் 8 வாகனங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. இயற்கை ப் பேரிடரால் எதிர்பாராமல் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக அவர் கூறினார். பருவ நிலை மாற்றத்தால் தொடர் மழை பெய்து வருவதால் நிலச்சரிவு மற்றும் மரங்கள் விழுவது போன்ற சம்பவங்களை எதிர் கொள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முகமட் பாரோக் கேட்டுக் கொண்டார். இந்தச் சம்பவத்தின் போது நிலச்சரிவில் மூவர் புதையுண்ட இடத்தில் தேடும் நடவடிக்கை கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles