25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பொழுதுபோக்கு விடுதியில் SOP மீறினர் 70 பேருக்கு அபராதம்

🔥 Views : 6
👁 Reading Now : 37

கோலாலம்பூரில் உள்ள இரண்டு வெவ்வேறு பொழுதுபோக்கு விடுதிகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் SOP விதிமுறையை மீறியதற்காக அதன் உரிமையாளர்களில் இருவருடன் 70 தனிப்பட்ட நபர்களுக்கு 70,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.முதல் பொழுதுபோக்கு விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த நிலையத்தின் இரண்டு உரிமையாளர்கள் மற்றும் 11 வருகையாளர்களுக்கும் இரண்டாவது பொழுதுபோக்கு விடுதியில் அங்கு கூடியிருந்த 57 வருகையாளர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் அபராதத்திற்கான குற்றப் பதிவு விநியோகிக்கப்பட்டது.இதனிடையே ஜனவரி 1ஆம் தேதி முதல் இன்றுவரை கோலாலம்பூர் விமான நிலையத்தை சுற்றிலும் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் கூடியவர்களுக்கு எதிராக 521 குற்றப் பதிவுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 521,000 ரிங்கிட் அபராதத்திற்கான குற்றப்பதிவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் சமூக பாதுகாப்புக்கான அதிகாரி Datuk Azman Ayob தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles