25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சிலாங்கூரில் 150 குன்றுப் பகுதிகளில் நிலச்சரிவு அபாயம்

🔥 Views : 8
👁 Reading Now : 59

சிலாங்கூரில் 150 குன்றுப் பகுதிகள் நிலச்சரிவு ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. இந்த குன்றுப் பகுதிகள் 150 மீட்டர் உயரத்திற்கும் அதிகமாக இருப்பதை சிலாங்கூர் மாநில அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பெரும்பாலானவை அம்பாங் மற்றும் உலு லங்காட் வட்டாரத்தில் அமைந்துள்ளன. தற்பொழுது அதிக அளவு மழை பெய்து வருவதால் சம்பந்தப்பட்ட குன்றுகளின் மண், நிலையற்று இருப்பதாக சிலங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் Izham Hashim கூறினார். அம்பாங் பகுதியில் அண்மையில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய ஆபத்தைக் கொண்ட மற்ற உயரமான பகுதிகளையும் கண்காணிக்கும்படி பொதுப்பணித் துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக Izham Hashim மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles