25.2 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

சிவபாலன் மரணம்; ஹாக்கி விளையாட்டிற்கு பெரும் இழப்பாகும்

🔥 Views : 5
👁 Reading Now : 31

மலேசிய ஹாக்கி குழுவின் முன்னாள் அனைத்துலக விளையாட்டாளர் எஸ். சிவபாலன் தமது 59ஆவது வயதில் காலமானது ஹாக்கி விளையாட்டிற்கு பெரும் இழப்பாகும். அரச ஈப்போ கிளப்பின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பேரா சீக்கியர் சங்க கிளப் மைதானத்தில் நடைபெற்ற ஹாக்கி விளையாட்டில் கலந்துகொண்ட சிவபாலன் நேற்று மாலை மணி 4 அளவில் திடீரென மயங்கி விழுந்து இறந்தார் என அவருடன் பல்வேறு அனைத்துலக ஹாக்கி போட்டிகளில் கலந்துகொண்ட மிர்னாவன் நவாவி தெரிவித்தார்.மாநில நிலையில் ஹாக்கி விளையாட்டின் மேம்பாட்டிற்கு பெரும் பங்காற்றிவந்த சிவபாலனின் திடீர் மரணம் ஹாக்கி விளையாட்டிற்கு பெரும் இழப்பு என மிர்னாவான் கூறினார். 1990 ஆம் ஆண்டில் பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவருடன் விளையாடியுள்ளேன். மலேசிய ஹாக்கி லீக் போட்டியில் கீலாட் கிளப் ஹாக்கி குழு மூன்று முறை வெற்றி பெறுவதற்கும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார். சக ஆட்டக்காரர்கள் கோல் அடிப்பதற்கு அற்புதமான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் சிறந்த விளையாட்டாளராக அவர் விளங்கினார் என மிர்னாவன் வேதனையோடு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles