
தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டவர்கள், உடனடியாக ஊக்க தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
ஊக்க தடுப்பூசியைப் பெற்று ஆரோக்கியத்தை பாதுகாப்போம் என்ற அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அனஸ் ஆலம் ஃபைஸ்லி, இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒருவர் கோவிட்-19 ல் இருந்து மீண்டுள்ள நிலையில், முன்னதாக தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு, மீண்டும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாலாம் என்று இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அனஸ் ஆலம் தெரிவித்துள்ளார்.
