25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மரியுபோல் நகரம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் ரஷிய போர் கப்பல்கள்

🔥 Views : 8
👁 Reading Now : 33

உக்ரைன் நகரங்கள் மீது  ரஷிய படைகள் வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷிய போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 
அசோவ் கடல்  பகுதியில் ரஷிய போர் கப்பல்களின் செயல்பாடுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் ஏழு ரஷிய கப்பல்கள் இருப்பதாகவும், கருங்கடலில் ரஷியா 21 கப்பல்களை நிறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இதனிடையே உக்ரைனில் உள்ள ரஷிய படையினர் உணவு மற்றும் எரிபொருளைப் பெறுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் உறைபனி மற்றும் கடும் குளிரை சமாளிக்க அவர்களிடம் போதுமான உபகரணங்கள் இல்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles