25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பு:
-நடவடிக்கை எடுக்க சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கோரிக்கை

🔥 Views : 8
👁 Reading Now : 36

கொரோனா பரவல் காரணமாக பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் மோசமான வருமான பாதிப்பை எதிர்நோக்கி உள்ளனர். மாற்று வழி இல்லாத இவர்களின் மீட்சி குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளிகள் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்ததால், பள்ளிப் பேருந்துகளை இயக்க வழியில்லை. இதனால், பள்ளிப் பேருந்து உ ரிமையாளர்கள் தொடர்ந்து வருமானம் இன்றி அல்லல்பட்டு வருகின்றனர்.

இப்போது பள்ளித் தவணை தொடங்கிவிட்டாலும், பிள்ளைகளின் பாதுகாப்பு கருதியும் SOP நடைமுறைகளைக் கருத்தில் கொண்டும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் சொந்த வாகனத்தின் மூலம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதால், பேருந்து மூலம் பள்ளிக்குவரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதிக்குமேல் குறைந்துவிட்டது.

அதனால், பள்ளிப் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் குறித்து அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான குணராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles