
ஜோகூர் மாநிலத்தில் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இன்று காலையில் பதவி உறுதிமொழி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், மாநில ஆட்சியாளர் மேன்மை தங்கிய சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர், புதிய ஆட்சிமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனே மக்களுக்கான கடமையில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
Datuk Zahari Sarip, Datuk Mohd Jafni Md Shukor, கே.ரவீன் குமார், Khairin Nisa Ismail, Mohd Hairi Mad Shah, Mohd Fared Mohd Khalid, Ling Tian Soon, Lee Ting Han , Mohamad Fazli Mohamad Salleh, Norliza Noh ஆகிய பத்து பேரும் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
புதிய ஆட்சிக்குழுவினர் பதவி உறுதிமொழி ஏற்ற சூட்டோடு, தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அனைவரும் முனைப்பு காட்ட வேண்டும் என்று புதிய நிருவாகத்தை மாநில சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.
