34 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

சோங்க்லாவில் தேடுதல் வேட்டை:
-மலேசியாவில் நுழைய காத்திருந்த 61 மியான்மாரியர் கைது

மியன்மார் நாட்டைச் சேர்ந்த 61 சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள சொங்க்லா மாகாணத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மலேசியாவிற்குள் சட்ட விரோதமாக நுழைய பொருத்தமான தருணத்திற்காக காத்திருந்தனர். 32 ஆண்கள், 29 பெண்கள் அடங்கிய இக்குழுவினர் மூன்று அறைகளில் பதுங்கி இருந்தனர்.

9 முதல் 17 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் உள்ளூர் முகவரிடம் 1லட்சத்து 50ஆயிரம் பாட்(மலேசிய நாணயம் வெ.19,000) செலுத்தியதற்குப் பின் இங்கு அழைத்துவரப்பட்டு, காத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக போலீஸ்-இராணுவத்தினர் இணைந்த தேடுதல் வேட்டை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதன் தொடர்பில், தாய்லாந்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles