
HSBC வங்கி ஊழியர்கள், தாங்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதை ஆட்சேபிக்கும் வகையில் அதன் நிர்வாகத்திற்கு எதிராக மறியல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்பில், தேசிய வங்கி ஊழியர் தொழிற்சங்கம்-NUBE சார்பில், கடந்த வாரமாக தீபகற்ப மலேசியா முழுவதிலும் மறியல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வங்கிப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தொழிற்சங்கம் சந்தித்து வருகிறது. அதேவேளை, சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் இத்தகைய பிரச்சினை குறித்து தொழிற்சங்கத்துடன் பேச்சு நடத்த மறுத்து வருவதால் இந்த மறியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக NUBE நிருவாகத் தரப்பு தெரிவித்துள்ளது.
