
குறைந்தபட்ச சம்பள விவகாரத்தில் தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் Noh Omar தலையிடுவதை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ்-MTUC சாடியுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையில் புதிய குறைந்தபட்ச சம்பளத் திட்டம் அமல்படுத்தப்படுவது ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதோடு பெரிய நிறுவனங்கள் மட்டுமே அந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
குறைந்தபட்ச சம்பள கொள்கைக்கு பொறுப்பு வகிப்பது மனித வள அமைச்சாகும். எனவே, மே 1ஆம் தேதியிலிருந்து 1,500 வெள்ளி குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து மனித வள அமைச்சு விளக்கம் அளிக்க வேண்டும் என MTUC யின் தலைமைச் செயலாளர் Kamarul Baharin Mansor கேட்டுக் கொண்டுள்ளார்.
