25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மக்கள் மகாதீரை நம்புவதில்லை

🔥 Views : 7
👁 Reading Now : 54

நாட்டு மக்கள் பொதுவாக துன் மகாதீரை நம்புவதில்லை; கடந்த பொதுத் தேர்தலின்போது நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களில் என்னென்ன செய்வோம் என்றெல்லாம் சொல்லி மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தபின், “தேர்தல் வாக்குறுதி என்பது, பைபிள் அல்ல” என்று சொல்லி மக்களை ஏமாற்றினார்.

அதனால் இவரின் பேச்சை ஒருவரும் பொருட்படுத்துவதில்லை. அண்மையில்கூட, ஜோகூர் தேர்தலில் இவரின் கட்சி வேட்பாளர்கள் 42 பேரும் கூண்டோடு வைப்புத் தொகையை இழந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் நிறுத்திய வேட்பாளர் தஞ்சோங்க் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மண்ணை கௌவினார். இத்தனைக்கு, மகாதீர் அப்போது பிரதமர்.

மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியெயெல்லாம் கவலைப்-படாத மகாதீர் எல்லாவற்றையும் தட்டிவிட்டு துடைத்துக் கொண்டு செல்லும் மனநிலைப் பெற்றுள்ளார். ஆனால், மற்ற தலைவர்களைப் பார்த்து, ‘வெட்கம் கெட்ட தனம் பெருகி வருகிறது’ என்று பேசுகிறார். மக்கள் எல்லாவற்றையும் உற்றுநோக்கி வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles