
வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 3-இல் தொடங்கும் என எதிர்பாக்கப்படும் ரமலான் நோன்பு மாதத்தை முன்னிட்டு, தலைநகரைச் சுற்றி, 5,000 அங்காடி கடைகளை உட்படுத்திய 72 ரமலான் சந்தைகள் திறக்கப்படும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம் அறிவித்தார்.
இந்த ரமலான் சந்தைகள் பிற்பகல் 3:00 மணி முதல் இரவு மணி 8:00 வரை செயல்படுமெனவும் சந்தைகளைத் திறப்பதற்கான இடங்களை கோலாலம்பூர் மாநகர் மன்றம் அடையாளம் கண்டுள்ளதாகவும் ஷஹிடான் காசிம் குறிப்பிட்டார்.
