
சொஸ்மா சட்டம் தொடர்பான தீர்மானத்தை மீண்டும் நாடாளுமன்றதில் தாக்கல் செய்வது தொடர்பில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் எந்த கலந்துரையாடலும் நடைபெறாது என DAP யின் தலைமை செயலாளர் Loke Siew Fook தெரிவித்தார்.
அரசாங்கம் மீண்டும் சொஸ்மா மீதான தீர்மானத்தை தாக்கல் செய்யப்போகிறதா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது. அது உள்துறை அமைச்சரின் முடிவுப் பொறுத்தது. ஆனால் இது குறித்து எங்களுடன் எந்தப் பேச்சும் இடம்பெறாது. அதேவேளை, சில திருத்தங்களோடு அந்த தீர்மானத்தை முன்மொழியலாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின.
