25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

மரண தண்டனைக்கு எதிரான நாகேந்திரனின் மனு நிராகரிப்பு

போதைப் பொருள் குற்றத்திற்காக தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மலேசியரான நாகேந்திரன் தர்மலிங்கம் செய்துகொண்ட மனுவை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

34 வயதுடைய நாகேந்திரன் தமக்கு மனநலப் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு மனநல நிபுணர் குழுவை அமைக்கும்வரை மரண தண்டனையை ஒத்திவைக்கும்படி அவர் தாக்கல் செய்திருந்த மனுவையும் தலைமை நீதிபதி உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்தது.

நாகேந்திரன் செய்திருந்த மேல்முறையீட்டில் எந்த அடிப்படை ஆதரமும் இல்லையென்று தலைமை நீதிபதி Sundresh Menon தீர்ப்பளித்தார். கடந்த 2009ஆம் ஆண்டு 42.2 கிரோம் ஹெரோய்ன் போதைப் பொருளை சிங்கப்பூருக்கு கடத்திய குற்றத்திற்காக நகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles