
மாட்சிமைசால் மாமன்னர் சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் சுல்தான் அகமது பில்லா ஷாவும் பேரரசியார் துங்கு அஸிஸா ஆமினா மைமுன்னா இஸ்கந்தரியா இருவருக்கும் கொரொனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதன் தொடர்பில் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாமன்னர் தம்பதியருக்கு இலேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகவும் இருவரும் வழக்கம்போல நல்ல நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் சுகாதார அமைச்சு வரைந்துள்ள SOP நடைமுறைகளை இருவரும் பின்பற்றுகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
