
செம்பூர்ணா Jalan Tagasan 12-ஆவது கிலோமீட்டர் பகுதியில் நிகழ்ந்த 20 டன் கனரக வாகனம், இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இறந்ததாக செம்பூர்ணா மாவட்ட போலீஸ் தலைவர் Farhan Lee Abdullah தெரிவித்தார்.
Kampung Lihak-இல் இருந்து Kampung Salimbangun நோக்கி சென்ற மகிழுந்தை ஓட்டிய 30 வயது ஆடவர், அவரின் மனைவி, அவர்களின் 10 மாத பெண் குழந்தை ஆகிய மூவரே இவ்விபத்தில் இறந்தனர்.
இவர்கள் பயணம் செய்த வாகனத்தை இன்னொரு வாகனம் மோதியதால் எதிர் திசையில் வந்த கனரக லோரியுடன் மோதி நசுங்கியது.
