34.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

கோழியைத் திருடினால் உடனே சிறை
பில்லியன் கணக்கில் திருடினால் சுதந்திரம்

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட டத்தோஸ்ரீ நஜிப், இன்னும் ஒரு நாள்கூட சிறையில் கழிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, நீதி அமைப்பைக் கேள்வி கேட்டதற்காக தான் அதிகாரிகளால் விசாரிக்கப்படலாம் என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

முன்பெல்லாம், சிறு குற்றம் இழைத்தவர்கள்கூட தண்டனை விதிக்கப்பட்ட-வுடன் சிறையில் அடைக்கப்பட்டனர்; இப்பொழுது நிலைமை வேறு;

கோழியைத் திருடினால் உடனே சிறை; மாறாக கோடிக்கணக்கில் திருடினால், குற்றவாளி என தண்டிக்கப்பட்டால்கூட, சில பில்லியன்களைத் திருப்பித் தந்துவிட்டு சுதந்திரமாக நடமாடலாம். இதுதான் மலேசியாவில் நீதி!

2020 ஜூலையில் ஏழு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் நஜிப்பிற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வெ.210 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டன. இருப்பினும் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால் நஜீப் சிறை மற்றும் தண்டத்தில் இருந்து தப்பி வருகிறார் என்று மகாதீர் புலம்பித் தீர்த்திருக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles