
செவ்வாய் க் கிழமை (5.4.2022) அதிகாலை 7.40 மணியளவில் சிரம்பான் அருகில் நிகழ்ந்த விபத்தில் இரும்பு லோரியில் இருந்து வெளியே தூக்கி யெறியப் பட்ட உதவி ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த வர் 23 வயது முகமட் நோர் இம்ரான் என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் நந்தா மாரோப் தெரிவித்தார். வடக்கு தெற்கு நெடுஞ்சாலை அவசரப் பாதையில் நின்றிருந்த ரப்பர் பொருளை ஏற்றிருந்த லோரியின் பின்புறத்தில் இரும்புக் கம்பி களை ஏற்றியிருந்த லோரி மோதியதைத் தொடர்ந்து அந்த ஆடவர் தூக்கி யெறியப் பட்டு இறந்த தாக போலீஸ் தலைவர் நந்தா மாரோப் கூறினார். இந்த விபத்தில் இரும்புக் கம்பி களை ஏற்றியிருந்த லோரி ஓட்டுநருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன
