
தனது வீட்டின் முன் புறம் உள்ள வேலியில் துணி களை உலர்த்தி க் கொண்டிருந்த 68 வயது மூதாட்டி யை பாராங்கத்தி முனையில் மிரட்டி ய இரு கொள்ளையர்கள் அவரிடம் இருந்து தங்க நகைகளைப் பறித்துச் சென்றனர். இந்த ப் பரபரப்பான சம்பவம் சிரம்பான் தாமான் துவாங்கு ஜப்பார் வீடமைப்பு ப் பகுதியில் நிகழ்ந்துள்ளது…… சம்பவத்தின் போது அந்த மூதாட்டி வீட்டின் முன் வாசலில் துணிகளை உலர்த்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த பட்ட பகல் திருடர் கள் கத்தி முனையில் அவரிடம் இருந்து தங்க வளையல் கள் மற்றும் தங்க மோதிரத்தை களவாடி தப்பிச் சென்ற தாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் நந்தா மாரோப் தெரிவித்தார். இந்த ச் சம்பவத்தின் காணொளி பக்கத்து வீட்டில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது என்று அவர் கூறினார்.இதன் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக நந்தா மாரோப் தெரிவித்தார்



