
இம்மாதம் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருந்த கட்சித் தாவலை தடுக்கும் மசோதா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்த மசோதாவுக்கு அமைச்சரவை இணக்கம் தெரிவிக்கவில்லை என்பதால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்ட அமைச்சர் Wan junaidi Tuanku Jaafar தெரிவித்தார்.
கட்சித் தாவல் தொடர்பான விளக்கம் குறித்து மேலும் கூடுதாலான ஆய்வுக்காக அந்த மசோதா திரும்ப அனுப்பப்படும் என அவரை மேற்கொள் காட்டி ஊடகங்களில் தகவல் வெளியிட்டன. எனினும் கட்சித் தாவலை தடுக்கும் மசோதாவுக்கான அரசிலமைப்பு சட்டத்திருத்தத்தை
தாக்கல் செய்யும் பொருட்டு ஏப்ரல் 11ஆம்தேதி சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் என்றும் wan Junaidi கூறினார்.
