
நாடு குறுந்தொற்று கட்டத்தை எட்டிய ஏப்ரல் முதல் நாளில் பன்னாட்டு எல்லைகளும் திறக்கப்பட்டன.
முதல் நான்கு நாட்களில் நாட்டின் பிரதான பன்னாட்டு முனையங்களின்வழி, மலேசியாவிற்கு வருகை தந்தவர்கள், மற்றும் வெளியேறியவர்களின் எண்ணிக்கை 2லட்சத்து 52ஆயிரத்து 730 பேர் என குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ கைரில் டாய்மி டாவுட் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து 65,155 பேர், தாய்லாந்தில் இருந்து 7,841 பேர், இந்தோனேசியாவில் இருந்து 5,173 பேர், இந்தியாவில் இருந்து 2,477 பேர், பிரிட்டனில் இருந்து 1,485 பேர் நாட்டிற்குள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதைப்போல கடந்த ஏப்ரல் 1 முதல் 4-ஆம் நாள் வரை 12,923 மலேசியர்கள் புதிய பன்னாட்டு கடப்பிதழைப் பெற்றுள்ளனர் என்றும் கைரில் டாய்மி டாவுட் தெரிவித்துள்ளார்.
