30.1 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

மருத்துவ நோக்கத்துக்காக கஞ்சா பயன்பாடு: -ஆய்வுகள் வரவேற்கப்படுகின்றன

மருத்துவ நோக்கத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது தொடர்பான மருத்துவ ஆய்வுகளை தமது தரப்பு வரவேற்பதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சு, மருத்துவ ஆதாரங்கள் அடிப்படையிலே ஒரு முடிவை எடுக்கும் கொள்கையைக் கொண்டிருப்பதை அவர் இவ்வேளையில் வலியுறுத்தினார்.

நாட்டில் மருத்துவ நோக்கத்திற்காக கஞ்சாவைப் பயன்படுத்துவது குறித்து பலரும் பேசி வருகின்றனர். சிலர் சமூக வலைத்தளம் மூலமாக தங்களது கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் அதை பயன்படுத்துவதற்கான உறுதியான ஆதாரத்துடன் முழுமையான எந்த ஆய்வும் இதுவரை சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்படவில்லை என கைரி மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles