25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

பிரதமரை முறையாக வரவேற்கத் தவறினர்:
2 அரச தந்திரிகள் திரும்ப அழைக்கப்பட்டனர்

அண்மையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மேற்கொண்டிருந்த பயணம் தொடர்பில், நாட்டின் இரு அரச தந்திர அதிகாரிகள் திரும்ப அழைக்கப்பட்டதை விஸ்மா புத்ரா ஒப்புக் கொண்டது.

பிரதமரை வரவேற்பதற்கான நிர்வாக நடவடிக்கைகளை முறையாக ஒருங்கிணைக்க தவறியதற்காக, அவ்விரு அதிகாரிகள் மீது அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவொன்றும் புதிய விவகாரமல்ல என விஸ்மா புத்ரா குறிப்பிட்டது.

துபாய் குடிநுழைவு துறையினரால் கடப்பிதழை சரிபார்க்கும் வரை, விமான வந்திறங்கும் பகுதியில் பிரதமர் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பில் முறையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles