
கோவிட்-19 தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படவிருக்கும் Paxlovid மாத்திரைகளின் கையிருப்பை மலேசியா பெற்றது. ஃபைசர் நிறுவன தயாரிப்பிலான அந்த மாத்திரைகள் 18 வயதுக்கு மேற்பட்ட கோவிட் நோயாளிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுமென சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
அந்த மாத்திரைகள் கோவிட்-19 தடுப்பூசிக்குப் பதிலாக பயன்படுத்தும் நோக்கத்தை கொண்டவை அல்ல. மாறாக கோவிட் -19 தொற்றுக்கு எதிரான மேலுமொரு ஆயுதம் தான் Paxlovid மாத்திரைகள் என அவர் கூறினார்.
