
சுங்கைப் பட்டாணியில் Klinik kesihantan Bandar பகுதியில் 50 ஆண்டு கால மரம் விழுந்ததில் அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த கிளினிக் பணியாளர்களின் 9 கார்கள் சேதம் அடைந்தன. மிகப் பெரிய சத்தத்தோடு அந்த மரம் கீழே விழுந்ததாக அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். எனினும் அந்த சம்பவத்தில் எவரும் காயம் அடையவில்லை; உயிர்ச் சேதமும் இல்லையென தெரிவிக்கப்பட்ட வேளையில், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த பொது தற்காப்பு படையினர், அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
