
50 லட்சம் வெள்ளி மதிப்பிலான சுங்க வரி செலுத்தப்படாத மதுபானம் மற்றும் சுருட்டு வகை புகையிலை தயாரிப்புகளை கடத்தும் முயற்சியை கோலாலம்பூர் மலேசிய அரச சுங்கத் துறை-JKDM முறியடித்துள்ளது.
மதுபானம் அடங்கிய 5 கொள்கலன்கள் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு இடையில் வைக்கப்பட்டிருந்த சுருட்டுகள் அடங்கிய ஒரு கொள்கலனும் அண்மையில் கிள்ளான் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டன.
கப்பல் சரக்குப் பட்டியலில் உள்ள தகவலும் வழங்கப்பட்ட தகவலும் முரணாக இருந்ததைத் தொடர்ந்து சந்தேகம் எழுந்ததாக மத்திய மண்டல சுங்கத் துறை உதவி தலைமை இயக்குனர் முஹமட் சப்ரி சாஹாத் கூறினார்.
