
Goldman Sachs வங்கியின் முன்னாள் அதிகாரி Tim Leissner-உடன் 10 ஆண்டுகள் தொடர்பில் இருந்ததாக நம்பப்படும் ஆஸ்ட்ரோவின் முன்னாள் தலைமை நிர்வாகி Rohana Rozhan, லண்டனில் வீடு வாங்குவதற்காக தனக்கு வழங்கப்பட்ட 1 கோடி அமெரிக்க டாலரை திரும்பி கொடுக்க இணக்கம் தெரிவித்திருப்பதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
லண்டனில் வீடு வாங்குவதற்காக Tim Leissner வழங்கிய பணம் 1MDB-க்கு சொந்தமானதாகும். அந்தப் பணத்தை திரும்ப கொடுக்க Rohana இணங்கியதை அடுத்து, அத்தொகையை திரும்ப பெறும் முயற்சியில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஈடுபட்டுள்ளது.
