25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

இஸ்மாயில் சப்ரியே பிரதமராக நீடிப்பார் என்பது உறுதியில்லை

15-ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை அம்னோ உச்சமன்றம் முன்மொழிந்திருந்தாலும் அவரே பிரதமராகத் தொடர்வார் என்பதற்கு எந்த உறுதிப்பாடும் இல்லை என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தாஜுடின் தெரிவித்துள்ளார்.

அண்மைய ஜோகூர் சட்டமன்ற தேர்தலின்போது, இடைக்கால மந்திரி பெசார் டத்தோ ஹஸ்னி முகமட்தான், தேசிய முன்னிணியின் மந்திரி பெசார் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதையும் தேர்தல் முடிவுக்குப் பின் மந்திரி பெசார் மாற்றப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே, அரசியலில் எதுவும் எந்த நேரத்திலும் நடைபெறலாம் என்பதால், 15-ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஒருவேளை வென்றாலும் இஸ்மாயிலே பிரதமராகத் தொடர்வார் என்பது உறுதியில்லை என்று தாஜுடின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles