25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

பன்னாட்டு எல்லைகள் திறக்கப்பட்டும்:
தங்கும் விடுதிகளின் நிலையில் மாற்றம் இல்லை

நாடு குறுந்தொற்று காலத்தை எட்டி, பன்னாட்டு எல்லைகள் திறக்கப்பட்டு, சுற்றுலா நடவடிக்கைகள் SOP நடைமுறைகளுடன் தொடர்ந்தாலும் தங்கும் விடுதிகளின் இயக்கம் தேசிய அளவில் இன்னும் மந்த அளவில்தான் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏப்ரல் மாதத்திற்கு முன், வாரக் கடைசியிலும் பொது விடுமுறை நாட்களிலும் 30-40% அளவுக்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில், தற்பொழுது பன்னாட்டு எல்லைகள் திறக்கப்பட்டு, நாடு குருந்தொற்று பருவத்தை எட்டியுள்ள நிலையில், தங்கும் விடுதிகளின் வர்த்தக நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏதும் நடைபெறவில்லையென மலேசிய தங்கும் விடுதி சங்க தலைமை நிருவாக அதிகாரி Yap Lip Seng தெரிவித்தார்.

தற்பொழுது, சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள், இந்தோனேசியப் பயணியர் எண்ணிக்கை மட்டும் சற்று அதிகரித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles