29 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

லோரிகளைத் திருடி பாகங்களைப் பிரித்து விற்று வந்த கேங் ஈஸ்வரன் கும்பல் கை து

🔥 Views : 18
👁 Reading Now : 49

லோரிகளைத் திருடி அவற்றின் பாகங்களைத் தனி த் தனியாகப் பிரித்து அதன் உபரிப் பாகங்களை விற்று வந்த கேங் ஈஸ்வரன் கும்பலைச் சேர்ந்த 10 பேர் போலீசாரின் பிடியில் வசமாக சிக்கினர்.மூன்று வெவ்வேறு இடங்களில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை யில் இவர்கள் கைது செய்ய ப் பட்டு விசாரணை க்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள தாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹரூண் ஜூனாய்டி தெரிவித்தார். கைதான கொள்ளையர்களில் இத் திருட்டுக் கும்பலுக்கு மூல கர்த்தாவாக செயல் பட்டு வந்த 47 வயது மதிக்கத்தக்க கார் பட்டறை நடத்துநரும் அடங்குவார் என்று அவர் கூறினார். கைதான வர்களில் ஒரு வங்காள தேச ஆடவனும் ஒரு பெண் ணும் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டது. போலீசார் மேற்கொண்ட கைது நடவடிக்கை யின் போது 6 இலட்சம் ரிங்கிட் மதிப்பு ள்ள ஒரு லோரி உபரி பாகங்கள் ஏதுமின்றி நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 20 லோரிகள் 9 இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக ஹருண் ஜூனாய்டி ஊடகவியலாளர் கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles